சிவில் பதிவு விண்ணப்பங்கள்
பதிவாளர் விண்ணப்ப படிவங்களைப் தரவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்க
திருமண பதிவாளர்களின் விவரங்கள்
| பிரிவு | பெயர் | பதவி | முகவரி | தொலைபேசி எண் |
| ஹெவ்லொக் நகரம் | திருமதி எம்.பி.சுரேகா | திருமண பதிவாளர் | இல55/21 ஸ்வர்ணா வீதி, ஹெவ்லொக் நகரம், கொழும்பு 05 |
077 576 1295 |
| ஹெவ்லொக் நகரம் | திருமதி டி.எஸ்.சூரியபண்டாரா | திருமண பதிவாளர் | ஜீவக மெடிக்கல் சென்டர், இல: 508, காலி வீதி, கொழும்பு 06 |
077 266 2148 |
| பொரளை | திருமதி மஞ்சுபானி காலிங்க | திருமண பதிவாளர் | பௌத்த இளைஞர் சங்கம், பொரளை |
071 263 9160 |
| கொழும்பு கிழக்கு | திருமதி சந்திரா ஈ.குரே | திருமண பதிவாளர் | இல: 60, பீட்டர்சன் லேன், வெள்ளவத்தை |
071 479 4774 |
| வெள்ளவத்தை | திருமதி.சந்திராணி சந்திரசேன | திருமண பதிவாளர் | இல: 18/2, பெர்னாண்டோ வீதி, வெள்ளவத்தை |
071 312 2889 |
| நாராஹேன்பிட்ட | திருமதி. லலிதா கருணாரத்ன | திருமண பதிவாளர் | இல: 165/46, ஶ்ரீ சதர்மாராம மாவத்தை, நாவல வீதி, நாராஹேன்பிட்ட |
071 866 7696 |
| நாராஹேன்பிட்ட | திருமதி எம்.ஜி.அனோமா பிரியதர்ஷனி | திருமண பதிவாளர் | இல:38/7, ஈ.டி. டாபரே வீதி, நாராஹேன்பிட்ட |
071 827 8383 |
| நாராஹேன்பிட்ட | திருமதி டபிள்யூ.பி.ஸ்ரியானி அசோகமாலா வெரகல | திருமண பதிவாளர் | இல:2291/7 எ, கிருல்ல வீதி, கொழும்பு 05 |
071 469 4138 |
| கொள்ளுபிட்டி | திருமதி காஞ்சனா ஜீவந்தி | திருமண பதிவாளர் | இல எ11,பெரஹேரா மாவத்தை, கொழும்பு 03 |
075 288 6839 |
| வெள்ளவத்தை | திருமதி. பி.தவமலர் | திருமண பதிவாளர்(தமிழ்) | இல:10, 37ம் வீதி, வெள்ளவத்தை |
077 210 6630 |
| கொழும்பு மேற்கு | திருமதி வனஜா சோமஸ்கந்தா | திருமண பதிவாளர்(தமிழ்) | இல:16,எலிபங்க் வீதி, கொழும்பு 05 | 077 748 4092 |
| கொள்ளுபிட்டி | திரு ஏ.எச். மொஹமட் அஜ்வத் | முஸ்லீம் திருமணங்களின் பதிவாளர் | இல:63/4, விவியன் குணவர்தன மாவத்தை, கித்தம்பாஹுவ, வெல்லம்பிட்டி |
071 829 7179 |
| பொரளை | திரு. எ.எம்.எம்.எம். ஃபாயிஸ் | திருமண பதிவாளர்(முஸ்லீம்) | இல:66/18, கோரஷானி லேன், கொழும்பு 09 | 071 488 9650 |
| தேமட்டகொடை | திரு எ.எச்.எம். சுபைர் | திருமண பதிவாளர்(முஸ்லீம்) | இல:293 எ, கடவத்த வீதி, நெடிமால, தெஹிவளை |
071 458 9617 |
| போரா சமூகம் (அனைத்து தீவு) | திரு ஏ.கே.அதமாலி | போரா திருமணங்களின் பதிவாளர் | இல:8, ஜாவட்ட அவென்யூ, கொழும்பு 13 | 077 776 7652 |
பிறப்பு இறப்பு பதிவாளர்களின் விவரங்கள்
| பிரிவு | பெயர் | பதவி | முகவரி | தொலைபேசி எண் |
| பொது மருத்துவமனை | திரு.ஜி.விஜேமன்னே | பிறப்பு இறப்பு பதிவாளர் | இல: 07, வார்டு பிலேஸ், கொழும்பு 07 | 077 113 3650 |
| பொரெல்லை | திரு.ஜி.விஜேமன்னே(பதில்) | பிறப்பு இறப்பு பதிவாளர் | இல: 07, வார்டு பிலேஸ், கொழும்பு 07 | 077 113 3650 |
| காசல் | திருமதி ஏ.வி.பி.ஜெயசூரியா | பிறப்பு இறப்பு பதிவாளர் | விஜய குமாரதுங்க மாவத்தை, கிருலப்பனை | 071 860 8030 |
| கொள்ளுபிட்டி | திருமதி பிரசாதி சதுரங்கிகா | பிறப்பு இறப்பு பதிவாளர் | முஹந்திராம் வீதி, கொள்ளுபிட்டி | 011 268 5262 |
| வெள்ளவத்தை | திருமதி பிரசாதி சதுரங்கிகா | பிறப்பு இறப்பு பதிவாளர் | முஹந்திராம் வீதி, கொள்ளுபிட்டி | 011 268 5262 |
| தெமட்டகொடை | டாக்டர் ஏ.சி.எம்.சானிக் | பிறப்பு இறப்பு பதிவாளர் | இல. 369, தெமட்டகொடை இடம், கொழும்பு 06 | 011 268 5262 |
| திம்பிரிகஸ்யாய | திரு. எம்.எம்.எம்.முஃபீல் | பிறப்பு இறப்பு பதிவாளர் (தமிழ் கொழும்பு 3 - 7 வரை) |
இல:08, அதுல இடம், கொழும்பு 05 | 077 707 0238 077 498 6707 011 251 4931 |
D24 - பிறப்பைக் காலம் கடந்து பதிவு செய்தல்
- பிறந்த மூன்று மாதங்களுக்குள் பதிவு செய்யப்படாவிட்டால் அத்தகைய பிறப்பு பதிவு செய்யப்படலாம்.
- பிரதேச செயலகத்தின் மேலதிக மாவட்ட பதிவாளரிடம் பிரகடன பத்திரத்தை சமர்ப்பிக்கவும்
- பெற்றோரில் ஒருவர் அல்லது நம்பகமான நபர் பிரகடன பத்திரத்தை சமர்ப்பிக்கலாம்
- பிரகடன பத்திரத்தின் பெறுமதி :- ரூ. 50.00
- ஒரு வருடத்திலும் குறைந்த பிறப்பைக் காலம் கடந்து பதிவு செய்வதற்குத் தேவையான ஆவணங்கள்.
- பிரகடன பத்திரம்
- பெற்றோரின் உறுதிப்படுத்தப்பட்ட திருமணச் சான்றிதழ் (திருமணம் ஆகியிருந்தால்)
- தாய் மற்றும் தந்தையின் உறுதிப்படுத்தப்பட்ட பிறப்புச் சான்றிதழ்
- பிறந்த திகதி மற்றும் பிறந்த இடத்தை நிரூபிக்க கீழே உள்ள ஆவணங்களில் ஒன்று சமர்ப்பிக்கப்படல் வேண்டும்.
- மருத்துவமனை பிறப்பு பதிவு அல்லது உறுதிப்படுத்தப்பட்ட நகல்
- கிராம நிலதாரியின் பிறப்பு அறிக்கை அல்லது உறுதிப்படுத்தப்பட்ட நகல்
- ஒரு வருடத்திலும் கூடிய பிறப்பைக் காலம் கடந்து பதிவு செய்வதற்குத் தேவையான ஆவணங்கள்.
- பிரகடன பத்திரம்
- பெற்றோரின் உறுதிப்படுத்தப்பட்ட திருமண சான்றிதழ் (திருமணம் ஆகியிருந்தால்)
- தாய் மற்றும் தந்தையின் உறுதிப்படுத்தப்பட்ட பிறப்புச் சான்றிதழ்
- பிறப்பு பதிவு செய்யப்படவில்லை என்பதை நிரூபிக்க nil resultக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
- பிறந்த திகதி மற்றும் பிறந்த இடத்தை நிரூபிக்க கீழே உள்ள ஆவணங்களில் ஒன்று சமர்ப்பிக்கப்படல் வேண்டும்.
- மருத்துவமனை பிறப்பு பதிவு அல்லது சான்றளிக்கப்பட்ட நகல்
- கிராம நிலதாரியின் பிறப்பு அறிக்கை அல்லது சான்றளிக்கப்பட்ட நகல்
- மேலே உள்ள ஆவணங்கள் இல்லை என்றால், கீழே உள்ள ஆவணங்களில் ஒன்றைச் சமர்ப்பிக்கலாம்
- சுகாதார மேம்பாட்டு அட்டவணை(Health Development Chart)
- ஞானஸ்நானம் பெற்ற சான்றிதழ்
- பாடசாலை வருகைப் பதிவேட்டின் உறுதிப்படுத்தப்பட்ட நகல் / பாடசாலையை விட்டு விலகியதற்கான சான்றிதழ்
- ஜாதகம்
- இந்த விடயத்தில் பெற்றோர் சமூகமளித்தல் வேண்டும்
D27 பிரிவின் கீழ் பெயர் மாற்றத்திற்குத் தேவையான ஆவணங்கள்- 07 வயதுக்கு குறைவு எனின்,
- திருத்தப்பட வேண்டிய உறுதிப்படுத்தப்பட்ட பிறப்புச் சான்றிதழ்
- தாய் மற்றும் தந்தையின் உறுதிப்படுத்தப்பட்ட திருமணச் சான்றிதழ்
- தாய் மற்றும் தந்தையின் உறுதிப்படுத்தப்பட்ட பிறப்புச் சான்றிதழ்
- விண்ணப்பதாரர் தந்தையாக இருந்தால், தாயினால் எழுத்துமூல ஒப்புதல் அளிக்கப்பட வேண்டும் (மறுதலையாகவும் பொருந்தும்)
- சமாதான நீதவானிடம் இருந்து இரண்டு பெயர்களும் ஒரே நபரைக் குறிப்பதை உள்ளடக்கிய பிரமாணப் பத்திரம் (Affidavit). அறிவிப்பவர் தந்தை/தாயாக இருக்க வேண்டும். (விண்ணப்பதாரர் ரூ.50.00 முத்திரையில் கையொப்பமிட்டிருக்க வேண்டும்)
D27 பிரிவின் கீழ் பெயர் மாற்றத்திற்குத் தேவையான ஆவணங்கள்- 07 வயதிற்கும் 21 வயதிற்கும் இடைப்பட்ட வயதினைக் கொண்டிருந்தால்
- திருத்தப்பட வேண்டிய உறுதிப்படுத்தப்பட்ட பிறப்புச் சான்றிதழ்
- தாய் மற்றும் தந்தையின் உறுதிப்படுத்தப்பட்ட திருமணச் சான்றிதழ்
- தாய் மற்றும் தந்தையின் உறுதிப்படுத்தப்பட்ட பிறப்புச் சான்றிதழ்
- விண்ணப்பதாரர் தந்தையாக இருந்தால், தாயினால் எழுத்துமூல ஒப்புதல் அளிக்கப்பட வேண்டும் (மறுதலையாகவும் பொருந்தும்)
- சமாதான நீதவானிடம் இருந்து இரண்டு பெயர்களும் ஒரே நபரைக் குறிப்பதை உள்ளடக்கிய பிரமாணப் பத்திரம்(Affidavit). அறிவிப்பவர் தந்தை/தாயாக இருக்க வேண்டும். (விண்ணப்பதாரர் ரூ.50.00 முத்திரையில் கையொப்பமிட்டிருக்க வேண்டும்)
- தொடர்புடைய பெயர் ஒரு வருடத்திற்கு மேல் பயன்படுத்தப்பட்டிருக்க வேண்டும் மற்றும் அது இரண்டு ஆவணங்களுடன் நிரூபிக்கப்பட வேண்டும்.
- மாற்றம் செய்யப்படும் பெயரானது கிராம நிலதாரியினால் கடிதம் மூலம் பரிந்துரை செய்யப்படல் வேண்டும்.
- பெயரை முழுவதுமாக மாற்ற வேண்டுமானால், ஒரு செய்தித்தாளில் வெளியிட வேண்டும் மற்றும் போலீஸ் அறிக்கை கட்டாயமானதாகும்
D27 பிரிவின் கீழ் பெயர் மாற்றத்திற்குத் தேவையான ஆவணங்கள்- 21 வயதிற்கு மேல் எனின்
- திருத்தப்பட வேண்டிய உறுதிப்படுத்தப்பட்ட பிறப்புச் சான்றிதழ்
- தொடர்புடைய பெயர் ஒரு வருடத்திற்கு மேல் பயன்படுத்தப்பட்டிருக்க வேண்டும் மற்றும் அது ஆகக் குறைந்தது மூன்று ஆவணங்களுடன் நிரூபிக்கப்பட வேண்டும்
- மாற்றம் செய்யப்படும் பெயரானது கிராம நிலதாரியினால் கடிதம் மூலம் பரிந்துரை செய்யப்படல் வேண்டும்.
- பெயரை முழுவதுமாக மாற்ற வேண்டுமானால், ஒரு செய்தித்தாளில் வெளியிட வேண்டும் மற்றும் போலீஸ் அறிக்கை கட்டாயமானதாகும்.
- சமாதான நீதவானிடம் இருந்து இரண்டு பெயர்களும் ஒரே நபரைக் குறிப்பதை உள்ளடக்கிய பிரமாணப் பத்திரம். (விண்ணப்பதாரர் ரூ.50.00 முத்திரையில் கையொப்பமிட்டிருக்க வேண்டும்)
D51(1) D27(A)-பிறப்புச் சான்றிதழில் பெயரைத் தவிர மற்ற விபரங்களை மாற்றுவதற்குத் தேவையான ஆவணங்கள்
- திருத்தப்பட வேண்டிய உறுதிப்படுத்தப்பட்ட பிறப்புச் சான்றிதழ்
- தாய் மற்றும் தந்தையின் உறுதிப்படுத்தப்பட்ட திருமணச் சான்றிதழ்
- தாய் மற்றும் தந்தையின் உறுதிப்படுத்தப்பட்ட பிறப்புச் சான்றிதழ்
- சமாதான நீதவானிடம் இருந்து பிரமாணப் பத்திரம்(Affidavit). (விண்ணப்பதாரர் ரூ.50.00 முத்திரையில் கையொப்பமிட வேண்டும்)
- பெற்றோரின் தேசிய அடையாள அட்டைகளின் புகைப்பட நகல்
- தகவல் தெரிவிப்பவரின் முகவரியைத் திருத்துவதற்கு தேர்தல் அலுவலகத்திலிருந்து வாக்காளர் பதிவேட்டின் சாரம் மற்றும் கிராம நிலதாரி வழங்கிய வசிப்பிடச் சான்றிதழ் அவசியம்.
பிறப்பு திருமணம் மற்றும் இறப்புச் சான்றிதழ்களின் உறுதிப்படுத்தப்பட்ட நகல்களைப் பெறுவதற்கு
- கொழும்பு மாவட்டத்தின் பல பிரிவுகளில் ஏப்ரல் 2019 வரை பதிவு செய்யப்பட்ட பிறப்பு, திருமணம் மற்றும் இறப்பு சான்றிதழ்களின் உறுதிப்படுத்தப்பட்ட நகல்களை எமது அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம்.
- கொழும்பு தவிர்ந்த அனைத்து மாவட்டங்களிலும் 1960 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரை பதிவு செய்யப்பட்ட பிறப்பு, திருமணம் மற்றும் இறப்பு சான்றிதழ்களின் உறுதிப்படுத்தப்பட்ட நகல்களை எமது அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம்.
36 ஆம் சட்டத்தின் கீழ் இறப்பைக் காலம் கடந்து பதிவு செய்தல்
மருத்துவமனையின் மரண அறிக்கை / கிராம நிலதாரியின் மரண அறிக்கை / எஸ்டேட்டின் மரண அறிக்கை
- இறுதிச் சடங்கின் போது செலவு செய்த செலவுப்பட்டியலின் செலவு விவரங்கள்
- நெருங்கிய உறவுகளை உறுதிபடுத்தும் உறுதிச் சான்றிதழ்கள்
- கிராம நிலதாரியின் சான்றிதழ்
- மத சடங்குகள் செய்யப்பட்டன என்பதை உறுதிப்படுத்தும் பொருத்தமான ஆவணங்கள்
- மரணத்திற்கான நிதி பெறப்பட்டது என்பதை உறுதிப்படுத்தும் சாட்சி அறிக்கைகள்
சான்றிதழ்களின் நகல்களை பெற்றுக் கொள்வதற்கான பெறுமதிகள்
1. பிறப்பு சான்றிதழ் Rs.120.00
(பதிவு இல. , அனைத்து விவரங்களுடனும் பிறந்த திகதி)
2. பிறப்பு சான்றிதழ் Rs.250.00
(02 வருட தேடல்களுடனான பிறந்த திகதி)
3. இறப்பு சான்றிதழ் Rs.120.00
(பதிவு இல. , அனைத்து விவரங்களுடனும் இறப்பு திகதி)
4. இறப்பு சான்றிதழ் Rs.250.00
(02 வருட தேடல்களுடனான இறப்பு திகதி)
5. திருமண சான்றிதழ் Rs.120.00
(பதிவு இல. , அனைத்து விவரங்களுடனும் திருமண திகதி)
6. திருமண சான்றிதழ் Rs.250.00
(02 வருட தேடல்களுடனான திருமண திகதி)













