அரசுக்குச் சொந்தமான பங்களாக்களைக் குத்தகைக்கு எடுப்பதற்கான முன்மொழிவுகளுக்கு அழைப்பு
இலங்கையின் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு, 30 வருட குத்தகை அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு சொந்தமான பங்களாக்களை மீண்டும் பயன்படுத்த, புதுப்பிக்க, மேம்படுத்த, இயக்க மற்றும் பராமரிக்க தகுதிவாய்ந்த முதலீட்டாளர்களிடமிருந்து தேசிய போட்டித் தேர்வு செயல்முறை மூலம் சீல் செய்யப்பட்ட முன்மொழிவுகளை அழைக்கிறது.
முதலீட்டின் நோக்கம் மற்றும் உரிமை
| அனுமதிக்கப்பட்ட நடவடிக்கைகள் | : சில்லறை வணிகம் (சுற்றுலா தொடர்பான), பூட்டிக் சூட்கள், சிற்றுண்டிச்சாலைகள் மற்றும் உணவகங்கள். |
| அபிவிருத்தி வரையறை | : சிறிய பழுதுபார்ப்புகள் மற்றும் தற்காலிகக் கட்டமைப்புகள், அதிகார சபையின் முன் ஒப்புதலுக்கு உட்பட்டவை. |
| உரிமை | : நிலம் மற்றும் கட்டிடத்தின் உரிமை இலங்கை அரசாங்கத்திடமே இருக்கும். |
| பொறுப்பு | : அனைத்து சட்டப்பூர்வ அனுமதிகள், ஒப்புதல்கள் மற்றும் உரிமங்களைப் பெறுவதற்கு முதலீட்டாளர்களே முழுப் பொறுப்பாவார்கள். |
மேலும் விவரங்களுக்கு, கீழே உள்ள இணைப்பைக் கிளிக் செய்யவும்...
பிறப்பு, திருமணம் மற்றும் இறப்பு சான்றிதழ்கள் இணையவழியினூடாக வழங்கப்படுகின்றது.
தற்போதுள்ள கோவிட்-19 சூழ்நிலையின் காரணமாக பிறப்பு, திருமணம் மற்றும் இறப்பு சான்றிதழ்களின் பிரதிகளைக் கோருவதில் உள்ள சிக்கல்களைக் கருத்திற் கொண்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்காக இணையவழி கோரிக்கை முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
பொதுமக்கள் தமது பிறப்பு, திருமணம் மற்றும் இறப்பு சான்றிதழ்களுக்கான இணையவழி விண்ணப்பத்தினை கையடக்கத் தொலைபேசி மற்றும் கணணி மூலம் விண்ணப்பிக்கலாம் மேலும் செலுத்த வேண்டிய பணத்தினை விசா மற்றும் மாஸ்டர் கடன்அட்டைகளின் மூலம் செலுத்தலாம் எனவும் தலைமைப் பதிவாளர் திணைக்களத்தினால் கூறப்பட்டுள்ளது.
பொதுமக்கள் தமது சான்றிதழ்களை துரித தபாலின் மூலம் அல்லது அருகில் உள்ள பிரதேச செயலகத்தில் பெற்றுக் கொள்ளலாம்.
தலைமைப் பதிவாளர் திணைக்களத்தின் இணைய முகவரி => http://online.ebmd.rgd.gov.lk
மேலதிக விவரங்களுக்கு => www.rgd.gov.lk
அல்லது அழைக்க வேண்டிய தொலைபேசி இலக்கம் => 0112 889 518















