எமது நோக்கு
நல்லாட்சியினதும், நிலைக்கத்தக்க அபிவிருத்தியினதும் முன்னுரிமை பாதை.எமது கொள்கை
புதுமையான மற்றும் வெளிப்படையான வள மேலாண்மை மூலம் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்காக செயலகப் பிரிவை வழிநடத்துதல்.திம்பிரிகஸ்யாய பிரதேச செயலகத்தின் வரலாறு
1991 முதல் பணியாற்றிய பிரதேச செயலாளர்கள்
பெயர் |
தொடக்கம் |
வரை |
| திரு. ஜார்ஜ் குலதுங்க | 1999.01.01 | 2005.12.06 |
| திரு. எம். பி. எம். சோமரத்ன | 2005.12.06 | 2007.02.02 |
| திரு. டபிள்யூ. என். ஆர். பி.விஜயபாலா | 2007.02.02 | 2009.02.14 |
| திருமதி. ஆர். அ. சுலானந்த | 2009.02.15 | 2011.04.20 |
| திருமதி. டபிள்யூ. பி. சந்தநாயக்க | 2011.04.20 | 2012.04.10 |
| திருமதி. கீதாமணி சி. கருணாரத்ன | 2012.04.09 | 2016.02.22 |
| திருமதி. பிரியந்தா திஸாநாயக்க | 2017.03.27 | 2024.12.31 |
| திரு.சுகத் சிசிர குமார | 2025.02.19 | இன்று வரை |
திம்பிரிகஸ்யாய பிரிவு
இது அண்ணளவாக 22 சதுர கிலோமீட்டர் (22 km2) பரப்பளவினைக் கொண்டது. இதன் எல்லைகளாக வடக்கில் கொழும்பு பிரதேச செயலகமும், தெற்கில் தெஹிவளை டச்சு கால்வாயும், கிழக்கில் ஶ்ரீ ஜெயவர்த்தனபுர கோட்டை பிரதேச செயலகம் மற்றும் கொலன்னாவ பிரதேச செயலகமும், மேற்கில் கடற்கரையும் அமைந்துள்ளன. இப்பகுதியின் மொத்த மக்கள் தொகை 235,986 என 2012 இல் மதிப்பிடப்பட்டுள்ளது.
திம்பிரிகஸ்யாய பிரதேச செயலகமானது கொழும்பு கிழக்கு, கொழும்பு மேற்கு மற்றும் பொரளை ஆகிய 03 பிரதான வாக்காளர் பிரிவுகளைக் கொண்டுள்ளது. இது 20 பிரதான கிராம நிலதாரி பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவையாவன: குருந்துவத்தை, குப்பியாவத்தை கிழக்கு, குப்பியாவத்தை மேற்கு, பொரளை வடக்கு, பொரளை தெற்கு, வனாத்தமுல்ல, தெமட்டகொட, கொள்ளுப்பிட்டி, பம்பலப்பிட்டி, மிலாகிரிய, ஹவ்லொக் நகரம், வெள்ளவத்தை தெற்கு, வெள்ளவத்தை வடக்கு, திம்பிரிகஸ்யாய, கிருல, கிருலப்பனை, நாராஹேன்பிட்ட, கோதமிபுர, பாமன்கடை கிழக்கு மற்றும் பாமன்கடை மேற்கு.
பொரளை மற்றும் கொழும்பு தெற்கில் இரண்டு சமுர்த்திப் பிரிவுகள் மற்றும் இரண்டு வலய கல்வி அலுவலகங்கள் அமைந்துள்ளன. சுகாதார மருத்துவ அதிகாரிகளின் 03 பிரிவுகள், கொழும்பு கிழக்கு (தலைமை அலுவலகம் - கிருலப்பனை), கொழும்பு மேற்கு (தலைமை அலுவலகம் - வெள்ளவத்தை) மற்றும் பொரளை (தலைமை அலுவலகம் - பொரளை) ஆகிய இடங்களில் உள்ளன.
திம்பிரிகஸ்யாய பிரதேச செயலகம் 08 அஞ்சல் பிரிவுகளைக் கொண்டுள்ளது. அவற்றைப் பின்வருமாறு பிரிக்கலாம். அவையாவன: கொழும்பு 03 - கொள்ளுப்பிட்டி, கொழும்பு 04 - பம்பலப்பிட்டி, கொழும்பு 05 - ஹவ்லொக் நகரம், நாராஹேன்பிட்ட மற்றும் திம்பிரிகஸ்யாய, கொழும்பு 06 - வெள்ளவத்தை, கிருலப்பன மற்றும் பாமன்கடை, கொழும்பு 07 - குருந்துவத்தை, கொழும்பு 08 - பொரளை, கொழும்பு 09 - தெமட்டகொட, கொழும்பு 10 - மருதானை மற்றும் புஞ்சி பொரளை.
பிரதான வாக்காளர் பிரிவுகள் - 03
- கொழும்பு கிழக்கு
- கொழும்பு மேற்கு
- பொரளை













